சென்னையில் ஓடும் 🚗காரில் திடீர் 🔥தீ-பரபரப்பு சம்பவம்😨 - Agnipuratchi

சென்னையில் ஓடும் 🚗காரில் திடீர் 🔥தீ-பரபரப்பு சம்பவம்😨

Share This

🏛சென்னை ஓஎம்ஆர் சாலை, கொட்டிவாக்கம் பகுதியில் இந்த விபத்து இன்று பிற்பகலில் நடைபெற்றது. டாடா இண்டிகா காரை, சுந்தரராஜன் என்ற டிரைவர் இயக்கினார்.அதில் மூன்று 👥பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அந்த 🚗கார் கேகே நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால், கொட்டிவாக்கம் பகுதியில் கார் வந்தபோது திடீரென முன் பகுதியில் இருந்து புகை வெளியாகியுள்ளது😳. சுதாரித்துக்கொண்ட டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்து 🚗காரை நிறுத்தினார்😯. அதற்குள், மளமளவென்று முன் பகுதியிலிருந்து காரின் பிற பகுதிக்கும் 🔥தீ பரவியது. இதை பார்த்த டிரைவர் மற்றும் சக பயணிகள், காரில் இருந்து வெளியே குதித்து தப்பினர்😌. அதன் பின்னர், 🚒தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் ஏறத்தாழ முக்கால் வாசி கார் பகுதி எரிந்து விட்டது😱. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான 🌞வெயில் சுட்டெரிக்க கூடிய சூழ்நிலையில் ஓடும் 🚗காரில் 🔥தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை😨 ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages