தருமபுரி முழுவதும் திண்ணைப் பரப்புரை! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா - Agnipuratchi

தருமபுரி முழுவதும் திண்ணைப் பரப்புரை! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா

Share This

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த மார்ச் மாதம் 20&ஆம் தேதி  விழுப்புரம் தொகுதியில் பிரச்சாரம் தொடங்கினார். தொடர்ந்து 27 நாட்களாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த மருத்துவர் அய்யா அவர்கள், கடந்த சில நாட்களாக தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று, பொதுமக்களைச் சந்தித்து திண்ணைப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பரப்புரைக் கூட்டத்திற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லாமல் தொலைதூரங்களில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் மருத்துவர் அய்யா, அங்குள்ள மக்களைச் சந்தித்து பேசுகிறார். மருத்துவர் அய்யாவின் மகிழுந்து  விளக்கு ஒளியில் தான் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. மக்களுடன் மக்களாக கலந்து அமர்ந்திருக்கும்  மருத்துவர் அய்யா, அங்கு கூடியிருக்கும் மக்களிடம் அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்கிறார். பின்னர் அக்குறைகளை களையவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு மக்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவளிக்கின்றனர்.

மருத்துவர் அய்யா அவர்கள் பங்கேற்கும் திண்ணைப் பரப்புரைக் கூட்டங்கள் மிகவும் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளன. அந்தக் கூட்டங்களில் மருத்துவர் அய்யா அதிகம் பேசுவதில்லை. மக்கள் தான் அதிக எண்ணிக்கையில் பேசுகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பேசுகின்றனர். தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட வேண்டும்; மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பது தான் பெரும்பான்மையான மக்களின்/ மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. அவர்களின் கோரிக்கைகள் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை என்று மருத்துவர் அய்யா அவர்கள் கூறும் போது அங்குள்ள மக்கள் அனைவரும் கைத்தட்டி ஆதரவு தெரிவிக்கின்றனர்.
தருமபுரி தொகுதியில் வரகூர், இபிகொல்லஹள்ளி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களை  மருத்துவர் அய்யா அவர்கள் நேற்று சந்தித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக இன்று பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் திண்ணைப் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages