ЁЯССро░ாроЬро░ாроЬроЪோро┤рой் роиிройைро╡ிроЯрод்родை родொро▓்ро▓ிропро▓் родுро▒ை роЖроп்ро╡ுЁЯСА-ЁЯПЫроородுро░ை роЙропро░்роиீродிроорой்ро▒роо்⚖ - Agnipuratchi

ЁЯССро░ாроЬро░ாроЬроЪோро┤рой் роиிройைро╡ிроЯрод்родை родொро▓்ро▓ிропро▓் родுро▒ை роЖроп்ро╡ுЁЯСА-ЁЯПЫроородுро░ை роЙропро░்роиீродிроорой்ро▒роо்⚖

Share This

🏛ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் 🤵திருமுருகன், 🏛மதுரை உயர்நீதிமன்றத்தில் 📜மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், "👑சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசர் முதலாம் ராஜராஜசோழன் 💺ஆட்சி காலத்தில் நுண்கலை, 🏗கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்து துறைகளும் சிறந்து விளங்கின👍. இதற்கான சான்றாக தஞ்சை பெரியகோவில் உள்ளது. ஆனால் அவரது நினைவிடம் 🏛தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உடையாளூர் என்ற கிராமத்தில் பராமரிப்பு இன்றி சிதைந்து கிடக்கிறது😟. இங்கு முறையாக தொல்லியல் ஆய்வு நடத்தினால் சோழர்களின் வரலாற்று சான்றுகள்📄 கிடைக்கும். அவருடைய புகழை நிலைநிறுத்தும் வகையில் 👑ராஜராஜசோழனின் 🗿சிலையை இந்திய 🌊பெருங்கடல் அல்லது வங்கக்கடல் பகுதியில் அமைக்கவும் உத்தரவிட⚖ வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, "🏛உடையாளூர் பகுதியில் 👑ராஜராஜசோழன் உடலை அடக்கம் செய்ததற்கான ஆதாரம் இல்லை🚫" என்று அரசு வழக்கறிஞர் சார்பில் வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள், முழுமையாக ஆய்வு செய்யாமல் முடிவு செய்யக்கூடாது😳. எனவே 🏛தமிழக அரசின் தொல்லியல் 👥குழுவினர் தற்போதைய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, 👑ராஜராஜசோழன் நினைவிடத்தை ஆய்வு👀 செய்து அறிக்கை📜 தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையினை🗣 வரும் 📆25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages