🏛தேனியில் ராகுல் காந்தி பங்கேற்கவிருந்த 👥பொதுக்கூட்ட மேடை சரிந்து விழுந்தது😱 - Agnipuratchi

🏛தேனியில் ராகுல் காந்தி பங்கேற்கவிருந்த 👥பொதுக்கூட்ட மேடை சரிந்து விழுந்தது😱

Share This

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் 👨ராகுல்காந்தி 🗳தேர்தல் பிரசாரத்துக்காக இன்று 🏛தேனி வருகிறார். அவர் கலந்து கொள்ளும் பிரசார 👥பொதுக் கூட்டத்திற்காக பிரமாண்ட மேடை, 🚁ஹெலிகாப்டர் இறங்குதளம் போன்றவை அமைக்கும் பணி நடந்தது👍. 70 அடி நீளம், 30 அடி அகலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வந்தது😯. இந்த பணி நேற்று மாலையில் நடந்து கொண்டு இருந்தபோது, திடீரென மேடை சரிந்தது😱. மேலும் மேற்கூரைக்காக இரும்பு குழாய்கள் பொருத்தப்பட்டு இருந்த நிலையில் அவையும் சரிந்து விழுந்தன😨. ஆனால் அதிர்ஷ்டவசமாக 👥தொழிலாளர்கள் காயமின்றி உயிர் தப்பினர்😌. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட 💺கலெக்டர் பல்லவி பல்தேவ், 👮போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு👀 செய்தனர். இதையடுத்து மேடையின் நீளம், உயரத்தை குறைக்க⏬ முடிவு செய்யப்பட்டு, நீளத்தை 70 அடியில் இருந்து 40 அடியாக குறைக்கவும், உயரத்தை 20 அடியில் இருந்து 16 அடியாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது😐. கூடுதல் தொழிலாளர்கள் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்😏. இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை😰 ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages