முறைகேடுகளில் ஈடுபட்டால் பொறியியல் பட்டம் ரத்து🚫-🏢அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை⚠ - Agnipuratchi

முறைகேடுகளில் ஈடுபட்டால் பொறியியல் பட்டம் ரத்து🚫-🏢அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை⚠

Share This

🏢அண்ணா பல்கலைக்கழகத்தில் 📆2017, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ✍செமஸ்டர் தேர்வுகளில் விடைத்தாள்களை📄 மாற்றி வைத்து முறைகேட்டில் ஈடுபட்டது அண்மையில் தெரியவந்தது😱. இதையடுத்து முறைகேட்டில் தொடர்புடைய 👥37 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம்🚫 செய்யப்பட்டனர். மேலும், முறைகேட்டில் தொடர்புடைய 132 மாணவர்களுக்கும் பட்டத்தை ரத்து🚫 செய்வதாக அறிவித்து, அவர்களின் ✍தேர்வு முடிவுகள் செல்லாது😯 என்றும், சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீண்டும் ✍தேர்வு எழுத வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் நேற்று அறிவித்தது🔈. இந்த நிலையில், இனிவரும் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் 👥மாணவர்களின் பொறியியல் படிப்பு தகுதி நீக்கம்👍 செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எச்சரிக்கை⚠ விடுத்துள்ளார். அதேபோல, தேர்வு முறைகேட்டில் ஈடுபடும் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அல்லாத பணியாளர்கள் மீதும் 😡கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்🗣. மேலும், மாணவர்கள் அல்லது பேராசிரியர்கள் என யாரேனும், இதுபோன்ற ஒழுக்கக்கேடான செயல்களுக்கு தங்களை அணுகினால்🙄 அண்ணா பல்கலைக்கழக ✍தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக 📲தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages