📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 மே 20 திங்கள் 🗓 - Agnipuratchi

📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 மே 20 திங்கள் 🗓

Share This

தமிழ்ச்சொல் அறிவோம்

சித்தாந்தம் - கோட்பாடு
➖➖➖➖➖➖➖➖➖➖

கருத்துக்கணிப்பில் பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு: டெல்லியில் நாளை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் விடுமுறை நாட்களை முன்னிட்டு குடும்பத்துடன் பிக்னிக் சென்றபோது அணையில் இருந்த நீரில் மூழ்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

காங்கிரஸ் தலைவர்களுடன் மாயாவதி இன்று சந்திப்பு இல்லை- பகுஜன் சமாஜ் கட்சி விளக்கம்

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில் 78 சதவீத வாக்குப்பதிவு

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

உலக அளவில் இந்தியாவில்தான் மது பழக்கம் அதிகரித்துள்ளதாக லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். எனவே தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை வகுக்கப்பட வேண்டியது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

மோடியிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்துவிட்டது - ராகுல் காந்தி தாக்கு

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

உதகையில் நடைபெற்றுவரும் மலர் கண்காட்சியை ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.

அரசியல்வாதிகளை கிண்டல் செய்ய ஊடகங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?: கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி

இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை

₹3.59 லட்சம் கையாடல் செய்த ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்: அறநிலையத்துறை நடவடிக்கை

அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் ஓட்டு போட்டு விட்டு திரும்பிய 2 பேர் திடீரென இறந்தனர்.

ஆரணி அருகே காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

ஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகல்: ஆஸ்திரியாவில் திடீர் தேர்தல் - அதிபரிடம் பிரதமர் பரிந்துரை

கடலூர் லால்பேட்டையில் உள்ள ராசிக் முகமது என்பவர் இல்லத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

ஹோண்டுராஸ் நாட்டில் குட்டி விமான விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 5 பேர் பலி

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தொடர் எதிர்ப்பு வயலில் இறங்கி பெண்கள் ஒப்பாரி போராட்டம்

‘நாட்டுக்காக பணம் திரட்டுவது எப்படி என்று காட்டுவேன்’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சூளுரை

அரசு வழங்கிய இலவச லேப்டாப்களை மாணவர்கள் பயன்படுத்துகிறார்களா?: ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு

எலக்ட்ரிக் கார்களை இயக்குவோரின் வசதிக்காக பொது இடத்தில் சார்ஜ் செய்ய வசதி ஏற்படுத்தும் பணி தீவிரம்: மத்திய எரிசக்தித்துறை நடவடிக்கை

கேதார்நாத் கோவிலை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் மோடி வழிபட்டார்

வேலூர், திருத்தணியில் வெயில் 109 டிகிரி

‘தனது ஆதாயத்துக்காக சாதி அரசியல்’ “காந்தியை மதவாதி என்று சொல்ல என்ன அருகதை உள்ளது?” திருமாவளவன் மீது தமிழிசை பாய்ச்சல்

உணவின் ஒரு பகுதியான கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்: கள் இயக்கம் கோரிக்கை

இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது: ஓட்டப்பிடாரம் தொகுதியில் 72.61 சதவீதம் வாக்குப்பதிவு

மணலி புதுநகரில் புதிதாக கட்டப்பட்ட கால்வாய் சில மாதங்களிலேயே உடைந்தது: தரமற்ற பணியே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவதிகை வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு 66.5 சதவீதம் ஓட்டுப்பதிவு

இணையதள அரசியல் விளம்பரங்களுக்காக ரூ.53 கோடி செலவு: முதலிடத்தில் பாஜக

இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது: சூலூர் தொகுதியில் 79.41 சதவீத ஓட்டுப்பதிவு

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாலியல் புகார்கள்: தகவல்களை திரட்டுகிறது யூஜிசி

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மறுவாக்குப்பதிவு: திருமங்கலம் வாக்குச்சாவடியில் 81.74 சதவீதம் ஓட்டுகள் பதிவானது

உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக தகுதிநீக்க தீர்மானம்: முன்மொழிந்த எம்.பி.க்கள் பெயர்களை வெளியிட முடியாது: சிஐசி

திருப்பரங்குன்றம் தொகுதியில் 74.11 சதவீத வாக்குகள் பதிவு

பாஜக கூட்டணி 400 தொகுதிகளை கைப்பற்றும்: யோகி ஆதித்யநாத் 

‘நான் ஓரினச் சேர்க்கையாளர்’ - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு

வாராணசி மக்களின் ஆசியைப் பெற்றவர் மோடி:  முரளி மனோகர் ஜோஷி

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் முடிவு

வயலூரில் கிளிமூக்கு, விசிறி வால் சேவல்கள் கண்காட்சி

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்

ரஷியாவுடன் இணைந்து எஸ்-500 ஏவுகணைகள் தயாரிப்பு: துருக்கி அறிவிப்பு

அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு

சாந்திவிலியில் தொழில் அதிபர் தூக்கில் தொங்கினார் கொலையா? போலீஸ் விசாரணை

பார்த்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு பா.ஜனதா-சிவசேனா அதிக தொகுதிகளை கைப்பற்றும்

கர்நாடகத்தில் குந்துகோல், சிஞ்சோலி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 76 சதவீத வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது

சிக்கன்ன கவுடா வெற்றிபெற வேண்டி வாக்குச்சாவடி மையத்துக்கு பூஜை செய்த பா.ஜனதா தொண்டர் தேர்தல் அதிகாரி விசாரணை

பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் வீட்டின் அருகே மர்ம பொருள் வெடித்து சலவை தொழிலாளி சாவு

நாடாளுமன்ற தேர்தல் முடிவு குறித்து ஆலோசனை ராகுல் காந்தியுடன், கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

ராஜீவ்காந்தி நினைவு தினம் - தமிழகத்தில் காங்கிரசார் நாளை அமைதி ஊர்வலம்

கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் கருத்துகளை கூற வேண்டாம் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சியினருக்கு தினேஷ் குண்டுராவ் வேண்டுகோள்

கோவை: 'நீர்நிலைகளில் எவ்வித கட்டுமானமும் இருக்கக்கூடாது' என்கிற சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, எவ்வித அனுமதியும் பெறாமல், குனியமுத்துார் செங்குளத்தின் தென்கரையில் ரோடு போடுவதற்கான முயற்சிகளில், மாநகராட்சி இறங்கியுள்ளது.

வில்லியனூரில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தகராறு போலீஸ்காரரை தாக்கிய ரவுடி உள்பட 2 பேர் கைது

திருச்சியிலிருந்து 170 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

திருக்கனூர் பகுதியில் கரடி நடமாட்டம்? வனத்துறையினர் நேரில் ஆய்வு

கேதார்நாத்தில் பிரதமர் மோடி தங்கி, தியானம் செய்த குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக, நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது.

சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.73.82 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.88 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages