23, 24 ஆகிய இரு தேதிகளிலும் புதுச்சேரியில் மதுபானக்கடைகளை மூட உத்தரவு! - Agnipuratchi

23, 24 ஆகிய இரு தேதிகளிலும் புதுச்சேரியில் மதுபானக்கடைகளை மூட உத்தரவு!

Share This

வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே23 ஆம் தேதியும் அதற்கு மறுநாளும் புதுவையில் மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்டத் தேர்தல் அதிகாரி அருண் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ஆண்கள் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இரண்டு வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியான அருண் வாக்கு எண்ணிக்கைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் ஒரு நாடாளுமன்ற தொகுதியின் கீழ் 30 சட்டமன்ற தொகுதிகள் இருப்பதால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என்றார்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8.30 மணிக்கு துவங்கும் எனவும் அவர் தெரிவித்தார். வரும் 23 மற்றும் 24 ஆகிய இரு தேதிகளிலும் புதுச்சேரியில் மது பானக்கடைகள் மூடப்படும் எனக் கூறிய அருண், தேவைப்பட்டால் 144 தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages