👶குழந்தை 💸விற்பனை விவகாரம்😳-7 பேரின் ஜாமீன் 📜மனு தள்ளுபடி⚖ - Agnipuratchi

👶குழந்தை 💸விற்பனை விவகாரம்😳-7 பேரின் ஜாமீன் 📜மனு தள்ளுபடி⚖

Share This

சட்டவிரோதமாக 👶குழந்தைகள் 💸விற்பனை செய்தது தொடர்பாக 🏛ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற 👩பெண் செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி (50), அவரது கணவர் 👨ரவிச்சந்திரன், 🏛அரசு 🚑ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உட்பட 👥10 பேரை சேலம் 🤵சிபிசிஐடி போலீசார் கைது⛓ செய்தனர். 👶குழந்தை 💸விற்பனையில் முக்கிய நபராக கருதப்பட்ட அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் கடந்த 📆16ம் தேதி 🏛திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்😯. இதையடுத்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஒய்வு பெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி அவரது கணவர் ரவிச்சந்திரன், ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் 2வது முறையாகவும், இடைத்தரகர் லீலா 3வது முறையாகவும், பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் 👩ரேகா, 👩அமுதவல்லியின் சகோதரர் நந்தகுமார், சேலம் கொல்லப்பட்டி 🏛அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி செவிலியர் ஷாந்தி ஆகியோர் முதன்முறையாகவும், மொத்தம் 👥7 பேர் ஜாமீன் கேட்டு நேற்று 🏛நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, இந்த 📜மனுக்கள் மீதான விசாரணை🗣 இன்று நடைபெற்றது. அப்போது, அமுதவள்ளி உள்ளிட்ட 7 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து 🏛நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages