80-ஐ வழி நடத்திய 95! வயது - பெரியாரின் பெருந்தொண்டர் ஆனைமுத்து அய்யாவுடன் மருத்துவர் இராமதாசு அய்யா ஒரு சந்திப்பு மூகநூல் பதிவு. - Agnipuratchi

80-ஐ வழி நடத்திய 95! வயது - பெரியாரின் பெருந்தொண்டர் ஆனைமுத்து அய்யாவுடன் மருத்துவர் இராமதாசு அய்யா ஒரு சந்திப்பு மூகநூல் பதிவு.

Share This

தந்தை பெரியாரின் பெருந்தொண்டர்களில் முதன்மையானவரான ஆனைமுத்து அய்யா அவர்களின் துணைவியார் சுசீலா அம்மாள்  கடந்த சில நாட்களுக்கு முன் காலமானார். அதைத் தொடர்ந்து கடந்த மே 2-ஆம் தேதி ஆனைமுத்து அய்யா அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நான், அவரது துணைவியாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தேன். அத்துடன் அவரை சந்திக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்தேன். அதைக்கேட்ட அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் நேரம் கிடைக்கும் போது நிச்சயம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.

அதையேற்று சென்னை புறநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று மாலை சென்றேன். 95 வயதான அந்த பெரியாரின் பெருந்தொண்டர் வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். எனது கைகளைப் பிடித்துக் கொண்ட அவர், அப்படியே வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். 95 வயதிலும் துடிப்புடன் திகழும் அவர்,  80 வயதான என்னை கைப்பிடித்து அழைத்துச் சென்றதை என்னை  வழிநடத்தியதாகவே உணர்ந்தேன். வீட்டிற்குள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது துணைவியார் சுசீலா அம்மாளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். தொடர்ந்து  அவரது குடும்பத்தினருடன் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன்.  பின்னர் அவரிடமிருந்தும், அவரது குடும்பத்தினரிடமிருந்தும் விடை பெற்றேன். அப்போதும் ஆனைமுத்து அய்யா அவர்கள் எனது கரங்களைப் பற்றி வீட்டு வாசல் வரை அழைத்து வந்து வழியனுப்பி வைத்தார். ஆனைமுத்து அய்யா அவர்கள் நூறாண்டு வாழ வேண்டும்.
இவ்வாறு மருத்துவர் அய்யா அவர்களின் மூகநூல் பக்கத்தில் இந்த சந்திப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளார்..

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages