அதிமுக எம்எல்ஏக்கள் 9⃣ பேர்👥 பதவியேற்பு👍 - Agnipuratchi

அதிமுக எம்எல்ஏக்கள் 9⃣ பேர்👥 பதவியேற்பு👍

Share This

தமிழகத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில்🗳 வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 9⃣ பேர், சென்னை🏙 தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்👏.

கடந்த 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் 1 மக்களவை தொகுதி மற்றும் 9 சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. திமுக 37 மக்களவை மற்றும் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 9 பேரும் இன்று பதவி ஏற்க விருப்பம் தெரிவித்து சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் தனபால், பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள்:  
சம்பத்குமார்(அரூர்),  
நாகராஜன்(மானமதுரை) 
தேன்மொழி(நிலக்கோட்டை) 
கோவிந்தசாமி(பாப்பிரெட்டிப்பட்டி)  
சதன் பிரபாகர்(பரமகுடி) 
ராஜவர்மன்(சாத்தூர்) 
சம்பத்(சோளிங்கர்) 
கந்தசாமி(சூலூர்) 
சின்னப்பன்(விளாத்திகுளம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages