இடைத் தேர்தலில்🗳 வெற்றி🎉 பெற்ற திமுகவைச் சேர்ந்த 13 பேரும் எம்எல்ஏ.க்களாக செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் பதவியேற்பு உறுதிமொழி✋ செய்து வைத்தார். தமிழக சட்டப் பேரவையில் காலியாக இருந்த 22 இடங்களுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றன.
திமுக சார்பில் வென்ற 13 பேரும் எம்எல்ஏ.க்களாக செவ்வாய்க்கிழமை பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கான நிகழ்ச்சி பேரவைத் தலைவர் அலுவலகத்தில்:classical_building எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.
13 பேரும் அகர வரிசைப்படி ஒவ்வொருவரும் தனித்தனியாக எம்எல்ஏ.க்களாக பதவியேற்றனர்.
பதவி ஏற்ற நபர்களின் பட்டியல்📜:
🔰இதயவர்மன்(திருப்போரூர்)
🔰எஸ்.காத்தவராயன் (குடியாத்தம்-தனி)
🔰ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி-தனி)
🔰செ.சண்முகையா (ஓட்டப்பிடாரம்-தனி)
🔰எஸ்.ஏ.சத்யா (ஓசூர்)
🔰க.சு.சரவணகுமார் (பெரியகுளம்-தனி)
🔰பா.சரவணன் (திருப்பரங்குன்றம்)
🔰வி.செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி)
🔰ஆர்.டி.சேகர் (பெரம்பூர்)
🔰டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்)
🔰பூண்டி கி.கலைவாணன் (திருவாரூர்)
🔰ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி)
🔰அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்)
13 எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றுக் கொண்டதால் சட்டப் பேரவையில் திமுக உறுப்பினர்களின் பலம் 101- ஆக அதிகரித்துள்ளது⬆. நீண்டகாலத்துக்குப் பிறகு சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியின் பலம் 100-ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment