மார்க்சீய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செமார்க்சீய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளரும், தந்தை பெரியாரின் உண்மையான தொண்டருமானயலாளரும், தந்தை பெரியாரின் உண்மையான தொண்டருமான வே.ஆனைமுத்து அவர்களின் துணைவியார் சுசீலா மறைவுக்கு மருத்துவர் இராமதாசு இரங்கல் - Agnipuratchi

மார்க்சீய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செமார்க்சீய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளரும், தந்தை பெரியாரின் உண்மையான தொண்டருமானயலாளரும், தந்தை பெரியாரின் உண்மையான தொண்டருமான வே.ஆனைமுத்து அவர்களின் துணைவியார் சுசீலா மறைவுக்கு மருத்துவர் இராமதாசு இரங்கல்

Share This

மார்க்சீய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளரும், தந்தை பெரியாரின் உண்மையான தொண்டருமான வே. ஆனைமுத்து அவர்களின் துணைவியார் சுசீலா அம்மாள் அவர்கள் உடல்நலக் குறைவால் நேற்று மாலை காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

திமுகவின் தூண்களில் ஒருவராக திகழ்ந்தவரும், திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தைக் கொடுத்தவருமான முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களின் சகோதரர் மகளான சுசீலா அம்மாள் தான் ஆனைமுத்து அவர்களின் பொதுவாழ்க்கை வெற்றி பெற காரணமாக திகழ்ந்தவர். ஆனைமுத்து அவர்களிள் சமூகநீதிப் போராட்டத்திற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்ட போதெல்லாம், குடும்பப் பொறுப்புகளை செம்மையாக நிறைவேற்றி, குழந்தைகளை பொறுப்புடன் வளர்த்தவர் சுசீலா அம்மாள் அவர்கள்.

குடும்பச் சுமையின் நிழல் கூட ஆனைமுத்து அவர்கள் மீது படாமல் சுசீலா அம்மாள் கவனித்துக் கொண்டதால் பெரியாருடன் இணைந்தும், பெரியாருக்குப் பிறகும் சமூகத்திற்காக அவரால் பாடுபட முடிந்தது. அம்மையாரின் இழப்பு ஆனைமுத்து அவர்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாததாகும்.

சுசிலா அம்மாளை இழந்து வாடும் ஆனைமுத்து அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages