🗳தேர்தலுக்குப் பிந்தைய 🎯கருத்துக் கணிப்புகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணித்துள்ளன😳. தனிப்பெரும்பான்மையுடன் கூடிய நிலையான 🏛அரசு மீண்டும் அமையும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக, பங்குச்சந்தைகளில் இன்று ஏற்றம்⏫ காணப்பட்டது. 💸வர்த்தக தொடக்கத்திலேயே🎉 உயர்வுடன் தொடங்கிய சென்செக்ஸ், முற்பகல் வர்த்தக்தின்போது 960 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது👍. 💸நிதி, 🚗வாகனம், 🏦வங்கி, உலோகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 🏢நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன🙂. 40 நிறுவனங்களின் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உயர்வை சந்தித்தன😯. பிற்பகல் வர்த்தகத்தின்போது ஒருகட்டத்தில் சென்செக்ஸ் ஆயிரத்து 100 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து👏, 39 ஆயிரத்து 45 புள்ளிகளை கடந்தது. ஒரே ⌚நிமிடத்தில், பங்குச்சந்தையில் 📜பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின், சந்தை மூலதன மதிப்பு 💰3 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. இதேபோல, தேசிய பங்குசந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்ததால் 👥முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்🤗. இதனிடையே, பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படுவதைப் பயன்படுத்தி பங்குவர்த்தகத்தில் முறைகேடுகள்🙄 நடைபெறுவதைத் தடுக்க🚫, பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமும், மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையும் கண்காணிப்பை👀 தீவிரப்படுத்தியுள்ளன.
💸பங்குச் சந்தை வர்த்தகம் ⏫உயர்வுடன் தொடக்கம்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment