சட்டரீதியான அங்கீகாரம் பெற்ற திருநங்கை திருமணம்💍 - Agnipuratchi

சட்டரீதியான அங்கீகாரம் பெற்ற திருநங்கை திருமணம்💍

Share This

🏛தூத்துக்குடி சங்கரபேரி பகுதியைச் சேர்ந்தவர் 👨அருண்குமார். 🏢தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் 🏢ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த, கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 👩ஸ்ரீஜா (திருநங்கை) என்னும் கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு 📆அக்டோபர் 31ம் தேதி தூத்துக்குடி சிவன் கோவிலில் 💍திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை பதிவு செய்ய இயலாது🚫, இதற்கான வழிவகை எதுவும் இல்லை🙄 என சார்பதிவாளர் கூறியதாக🗣 தெரிகிறது. இதைத்தொடர்ந்து அந்த தம்பதி, தங்களது திருமணத்தை பதிவு செய்து திருமணப் பதிவு சான்றிதழ்📜 வழங்க தமிழக அரசுக்கு ⚖உத்தரவிடக் 🙏கோரி 🏛உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்குத் தொடர்ந்தனர். இதனை விசாரித்த🗣 நீதிமன்றம், அவர்களின் 💍திருமணத்தை பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கடந்த மாதம் உத்தரவிட்டது⚖. இதனையடுத்து, அந்த தம்பதிக்கு திருமண பதிவுச்சான்று வழங்குவதற்கான ரசீது வழங்கப்பட்டது👍. தொடர்ந்து அவர்கள் இருவரும் அனைவரின் முன்னிலையில் மோதிரம், மாலை மாற்றி கொண்டனர்👏. தமிழகத்தில் முதல் முறையாக திருநங்கை ஒருவரின் திருமணத்தை அங்கீகரித்து சார்பதிவாளர் அலுவலகம் பதிவுச் சான்றிதழ்📜 வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages