முறையாகப் பதிவு செய்யாத 🏥மருத்துவமனைகள், கிளினிக் ஆகியவை மூடல்🔒 - Agnipuratchi

முறையாகப் பதிவு செய்யாத 🏥மருத்துவமனைகள், கிளினிக் ஆகியவை மூடல்🔒

Share This

🏛தமிழகத்தில் உள்ள அனைத்து 💉மருத்துவம் சார்ந்த நிறுவனங்களும், 📆2018 தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்திருப்பது கட்டாயம்😐. மார்ச் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற நிலையில், தற்போது அந்தக் கெடு 📆இம்மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவச் சேவைகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது🔈. இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்தால் மட்டுமே, கிளினிக்குகள், மருத்துவ ஆய்வகங்கள், 🏥தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவை தொடர்ந்து இயங்க முடியும்😳, இதனை பதிவு செய்ய மருத்துவ நிறுவனங்களுக்கு பல்வேறு விதிமுறைகளும் உள்ளன. அதன்படி, போதிய இட வசதி, சுகாதாரமான 🚰குடிநீர் வசதி, 🚽கழிப்பிடம், ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான 👥ஊழியர்கள் இருத்தல் வேண்டும். கிராமப்புறங்களில் இருக்கும் ஆய்வகங்கள் 500 சதுர அடி பரப்பிலும், நகர்ப் புறங்களில் இருக்கும் ஆய்வகங்கள்👀 700 முதல் ஆயிரத்து 500 சதுர அடி பரப்பிலும் இருப்பது அவசியம்😯. சென்னையில், மருத்துவ சேவைகள் இயக்குனரகத்தின் 👥3 குழுக்கள், இதுதொடர்பான சோதனையில் ஈடுபட்டுள்ளன. பதிவு செய்யாத 🏥மருத்துவமனைகள், கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவை இழுத்து மூடப்பட🔒 உள்ளன. பதிவு செய்யும் பட்சத்தில், 📆5 ஆண்டுகளுக்கு உரிமம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages