🏛தமிழகத்தின் தற்போதைய நிலவரப்படி வெளியாகி வரும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் 🌞திமுக 12 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 🌱அதிமுக 10 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 🌱அதிமுக தொடர்ந்து 10 இடங்களில் முன்னிலை பெறுவதை🎉 தக்கவைத்துக் கொண்டால் 💺ஆட்சி மாற்றம் ஏற்படாது🚫 என்பது குறிப்பிடத்தகக்து. தொகுதி விவரங்கள் இதோ👇
🔰திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணன் முன்னிலை பெற்றுள்ளார்.
🔰சுற்று ஒன்று முடிவில் அதிமுக கட்சி மானாமுதுரை, ஆண்டிப்பட்டி, சாத்தூர், விளாத்திக்குளம், சூலூர், ஓசூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், நிலக்கோட்டை ஆகிய இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
🔰ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருவாரூர், பெரியகுளம், பரமக்குடி, தஞ்சாவூர், ஆம்பூர் ஆகிய இடங்களில் திமுக முன்னிலை பெற்று வருகிறது.
🔰திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை
🔰அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி முன்னிலை.
🔰சூலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி பின்னடைவு. அதிமுக வேட்பாளர் கந்தசாமி 9579 வாக்குகள் பெற்று முன்னிலை. சூலூர் சட்டமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளர் கே. சுகுமார் 97 வாக்குகள் பெற்றுள்ளார்.
🔰திருவாரூர் சட்டமன்ற தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக 412 வாக்குகளையும், அதிமுக 233 வாக்குகளையும், அமமுக 95 வாக்குகளையும் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment