🏛மத்திய அமைச்சரவை 👥கூட்டம் இன்று நடைபெறுகிறது👍 - Agnipuratchi

🏛மத்திய அமைச்சரவை 👥கூட்டம் இன்று நடைபெறுகிறது👍

Share This

ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த 🗳தேர்தலில் பதிவான 👆வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றியை🎉 உறுதி செய்தது. இதனால், 🏛மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் 💺ஆட்சி அமைக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்👍. இந்நிலையில், மத்திய அமைச்சரவை 👥கூட்டம் இன்று கூடுகிறது. தற்போதைய மக்களவையின் பதவிகாலம் முடிந்து, புதிய மக்களவை தொடங்குவதோடு, பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளதால் அதையொட்டி, இந்த கூட்டத்துக்கு அழைப்பு🗣 விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நடைபெறும் இந்தக் 👥கூட்டத்தில் 16வது மக்களவையை கலைக்க பரிந்துரை விடுக்கப்படும். கேபினட் பரிந்துரையை தொடர்ந்து, தீர்மானமாக ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்😯. இதையடுத்து, ஜனாதிபதி 16வது மக்களவையை கலைத்து உத்தரவு⚖ பிறப்பிப்பார். தேர்தல் 🤵ஆணையர்கள் ஜனாதிபதியை சந்தித்து👀, புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களின் 📜பட்டியலை அளித்த பிறகு 🏛புதிய அரசை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் துவங்கும்🎊 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages