🌊காவிரி 🚰குடிநீரில் அமோனியா பாஸ்பேட் அளவு அதிகரிப்பு⏫-ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது😱 - Agnipuratchi

🌊காவிரி 🚰குடிநீரில் அமோனியா பாஸ்பேட் அளவு அதிகரிப்பு⏫-ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது😱

Share This

🌊மேட்டூர் அணையிலிருந்து 🛣சேலம்-ஆத்தூர் கூட்டு 🚰குடிநீர் திட்டத்திற்காக, தினமும் 70 மில்லியன் லிட்டர் குடிநீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது😯. இதன்மூலம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 1,345 வழியிடை கிராமங்கள் பயன் பெறுகின்றன👍. இந்நிலையில், கடந்த சில நாட்களாக 🏛ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட 🚰குடிநீர் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதாகவும்😳, துர்நாற்றம் வீசுவதாகவும்😒 புகார் எழுந்தது. மேலும், நிறம் மாறி வந்ததால் 😱அதிர்ச்சியடைந்த 👥மக்கள், அதனை பாட்டில்களில் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்💪. இதனையடுத்து, குடிநீர் வடிகால் வாரிய தலைமை நீர் பகுப்பாளர் 🤵கோபால் தலைமையிலான குழுவினர், நேற்று சென்னையிலிருந்து மேட்டூர் சென்று 🚰குடிநீர் எடுக்கப்படும் பகுதியில், 💦நீர் மாதிரியை எடுத்து அங்கேயே ஆய்வு👀 செய்தனர். 
இதில், 🚰குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரில் அமோனியா, பாஸ்பேட் அளவு அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது😮. இது குறித்து, குடிநீர் வடிகால் வாரிய தலைமை நீர் பகுப்பாளர் 🤵கோபால் கூறுகையில்🎙, "🌊காவிரி ஆற்று நீரில் அமோனியா லிட்டருக்கு 0.5 மில்லி கிராம் மட்டுமே இருக்க வேண்டும்😐. ஆனால், 1 முதல் 1.5 மில்லி கிராம் அமோனியா உள்ளது🙄. அதேபோல், பாஸ்பேட் என்பதும் சுத்தமாக இருக்க கூடாது🚫. ஆனால், 2 மில்லி கிராம் கலந்துள்ளது😞. இதனாலேயே, தண்ணீர் நிறம் மாறியதுடன் துர்வாடையும் வீசுகிறது" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages