🏛ஆந்திராவில் சந்திரபாபுவுக்கு கட்டிய சொகுசு 🏢பங்களா இடித்து தரைமட்டம் ❗ - Agnipuratchi

🏛ஆந்திராவில் சந்திரபாபுவுக்கு கட்டிய சொகுசு 🏢பங்களா இடித்து தரைமட்டம் ❗

Share This

2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் 🗳தேர்தலில் வெற்றி பெற்று 💺முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு, 2017ஆம் ஆண்டில் கிருஷ்ணா 🌊நதிக்கரை ஓரம் அரசு செலவில் 5 💰கோடி ரூபாய் மதிப்பில் பிரஜா வேதிகா என்ற 🏢பங்களாவைக் கட்டினார். உண்டவல்லி என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள அந்தக் கட்டிடத்திற்கு அருகிலேயே சந்திரபாபு நாயுடுவின் மாளிகையும் உள்ளது. இந்த 2⃣ மாளிகைகளும் கிருஷ்ணா நதிக்கரையில் சுற்றுச்சூழல் 🤷‍♂விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், பிரஜா வேதிகா 🏢மாளிகை புதன் கிழமை அதிகாலை இடித்து 🙄தரைமட்டமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவின் பங்களாவும் இடிக்கப்பட உள்ளதாக ஆந்திர முதல்வர் 💺ஜெகன் மோகன் ரெட்டி 🎙தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages