🏭ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம்⁉-குற்றம்சாட்டும் வேதாந்தா நிறுவனம்🔈 - Agnipuratchi

🏭ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம்⁉-குற்றம்சாட்டும் வேதாந்தா நிறுவனம்🔈

Share This

🏛தூத்துக்குடி 🏭ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம், ஆலையை மூடியதன் பின்னணியில் ✈சீன 🏢நிறுவனத்தின் சதி உள்ளதாக, 🏛உயர்நீதிமன்றத்தில், 🏢வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது🔈. இதுதொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வில் நிலுவையில் உள்ளது😯. இதே அமர்வில், வியாழக்கிழமையன்று, வழக்கு விசாரணைக்கு🗣 வந்தபோது, 🏭ஸ்டெர்லைட் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜரானார். அப்போது, கடந்தாண்டு ஆலைக்கு எதிராக நடைபெற்ற 💪போராட்டம், அரசியல் நோக்கம் கொண்ட ஒரு சிலர் மற்றும் சில என்.ஜி.ஓ-களால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக🙄 வாதிட்டார். தொடர்ந்து பேசிய அவர்🗣, ஸ்டெர்லைட் ஆலையை 🔒மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது😳 என்றும், போராட்டத்தை தூண்டியதும், போராட்டக்காரர்களுக்கு 💸நிதியுதவி வழங்குவதும் சீன நிறுவனம் தான்😐 என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இவரது வாதம் நிறைவு பெறாததால், விசாரணையை, வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages