வாயு 🌪புயல் - 🚤மீனவர்கள் 🌊கடலுக்கு செல்ல 🙅‍♂வேண்டாம் - Agnipuratchi

வாயு 🌪புயல் - 🚤மீனவர்கள் 🌊கடலுக்கு செல்ல 🙅‍♂வேண்டாம்

Share This

தென்மேற்கு 🌨பருவமழை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்து வரும் நிலையில், 🌊அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ளது. இந்த புயலிற்கு 🌪'வாயு' என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வாயு புயல் நாளை அதிகாலை குஜராத்தில் 🌊கரையைக் கடக்கும் என 🇮🇳இந்திய வானிலை ஆய்வு மையம் 📣அறிவித்துள்ளது. இது குறித்து 🔭வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி 📜குறிப்பில், தீவிர புயலான வாயு, நாளை அதிகாலையில் குஜராத்தின் போர்பந்தர் - மஹுவா இடையே கரையை கடக்கும் என்றும். அப்போது மணிக்கு 110 முதல் 135 கி.மீ வேகம் வரை காற்று 💨வீசும் என்றும். கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மிக 🌨கனமழை பெய்யக்கூடும் எனவும் 🎙தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குமரி, நெல்லை மாவட்ட 👥மீனவர்கள் 🌊அரபிக்கடலுக்கு அடுத்த 2⃣ 📆நாட்களுக்கு செல்ல வேண்டாமெனவும் வானிலை மையம் 🗣அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages