கடை நிலைப் பணிக்கு ✍எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க 🏛நீதிமன்றம் உத்தரவு - Agnipuratchi

கடை நிலைப் பணிக்கு ✍எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க 🏛நீதிமன்றம் உத்தரவு

Share This

தேனியை சேர்ந்த மாற்றுதிறனாளி உதயகுமார், காமயகவுண்டன்பட்டி பஞ்சாயத்து யூனியன் 💺செயலாளரின் நெருங்கிய உறவினர் என்பதால், தனக்கு பின் வேலை வாய்ப்பு 🏢அலுவலகத்தில் விண்ணப்பித்த சேகர் என்பவருக்கு, இரவு காவலர் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரது பணிநியமனத்தை ❌ரத்து செய்து தனக்கு அந்த பணியை வழங்க வேண்டும் என்று கோரி 🏛உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். 
இந்த வழக்கை 🗣விசாரித்த நீதிபதி, பணிநியமனம் நடந்த 8⃣ ஆண்டுக்குபின் இந்த 📜மனு அளிக்கப்பட்டுள்ளதால், சேகரின் பணியை ரத்து செய்ய முடியாது என 🎙தெரிவித்தார். மேலும் துப்புரவு பணியாளர், தோட்ட பணியாளர், மதிய உணவு ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட கடை நிலை பணிகளுக்கும் ✍எழுத்து தேர்வு முறையில், 👥பணியாளர்களை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை பிறப்பிக்கும்படி அரசுக்கு ⚖நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages