வேலூர் 🏛தொகுதிக்கு விரைவில் மக்களவைத் 🗳தேர்தல் - Agnipuratchi

வேலூர் 🏛தொகுதிக்கு விரைவில் மக்களவைத் 🗳தேர்தல்

Share This

நடந்து முடிந்த நாடாளுமன்ற 🏛மக்களவைத் தேர்தலில் வேலூர் தவிர இதர 3⃣8⃣ மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வேலூர் தொகுதி திமுக 👤வேட்பாளர் கதிர் ஆனந்த் தேர்தலில் 💸பணப்பட்டுவாடா செய்ததாக வந்த புகாரை அடுத்து, வருமான வரித்துறையினர் துரைமுருகன் மற்றும் அவரது உதவியாளருக்குச் சொந்தமான இடங்களில் 🔍சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுமார் 11 💰கோடி அளவில் பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, வேலூர் தொகுதிக்கு மட்டும் 🗳தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் 🙄திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து, விரைவில் அதற்கான 📣அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages