🌊கடல்நீரை 🚰குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்👏 முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி - Agnipuratchi

🌊கடல்நீரை 🚰குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்👏 முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி

Share This

🏛திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தினமும் 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் 🌊கடல் நீரை 🚰குடிநீராக்கும் திட்டம் 📆10 ஆண்டுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது👍. இந்த தண்ணீர் வட சென்னை பகுதிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது😯. அதேபோல், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியிலும் 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி🎉 திருவான்மியூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளுக்கு தினமும் 80 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது👍. இந்த 2 திட்டத்துக்கும் 💰ரூ.1140 கோடி வரை செலவானது. இந்நிலையில் தற்போது, நெம்மேலியில் கூடுதலாக 150 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது👏. இந்த புதிய 🏭ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா🎊 இன்று நடைபெற்றது. புதிய ஆலைக்கு முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்🎊. இந்த புதிய திட்டத்தின் மூலம் தென்சென்னை பகுதியில் உள்ள சுமார் 👥9 லட்சம் மக்கள் பயனடைவார்கள்👌 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages