SRM பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஓரிரு நாளில் நடந்த மாணவிகள் தற்கொலையைப் பற்றி பேசாத தமிழக ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு பிற செய்திகளை முன்னிறுத்தும்போதே எந்த அளவிற்கு அதை மறைக்க முயற்சி செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது!தற்போது இறந்த மாணவிகள் விசயத்தை அன்று உதயகுமார் என்ற மாணவனுக்கு இழைத்த துரோகத்தின் மறுவடிவம் தான் இன்று SRM பல்கலைக்கழகத்தில் நடந்தேறி இருக்கிறது! அன்று உதயகுமார் என்ற மாணவர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை எதிர்த்து உதயகுமார் என்ற மாணவர் நாய் கழுத்தில் டாக்டர் என்று எழுதிய அட்டையோடு பொதுக் கூட்டத்தில் துரத்தி விட்டதற்காக கருணாநிதி அரசு விசாரணை என்ற பெயரில் நடந்த கொலையை இல்லை என்று மறைக்க அறையில் கூட இருந்தவர்களே இல்லை என்று சாட்சி சொல்லி பெற்றோர்கள் தங்களுக்கு உதயகுமார் என்ற மகன் இல்லை என்று சொல்ல செய்த அவலம் நடந்ததை வாய் வழி செய்தியாக அறிந்தோம்!
இன்று இவ்வளவு ஊடகங்கள் இருந்து உண்மையை மறைக்க பல ஊடகங்களின் நிர்வாகத்தினரையே விலைக்கு வாங்கியதன் தோற்றம் தெரிகிறது! நடந்தது கொலையோ,தற்கொலையோ எதற்காக ஒன்றன் பின் ஒன்றாக நடந்தது என்பதை தெளிவு செய்ய எந்த தமிழ் ஊடகமும் தயாராக இல்லை! போன உயிர்கள் திரும்பி வரப் போவது இல்லை! ஏன் என்ற நியாயமும் தெளிவும் பெறாமல் இருப்பதற்கு ஊடகங்களை திசை திருப்ப பல லட்சம் மறைமுக கையூட்டு கொடுத்து "நேசமணி" என்ற பெயரில் புதிதாக ஒன்றை கிளப்பி அதை பிரபலம் அடைய வைத்து உள்ளனர்! இதில் உள்ள சூட்சமத்தில் நேரடியாக பலன் அடைந்தவர்கள் குறைவானவர்கள் என்றாலும் தமிழகத்தில் வழக்கம் போல் உள்ள முட்டாள் நெட்டிசன்கள் அதை தனதாக்கி கொண்டார்கள்! தமிழக அரசின் சைபர் கிரைம் போலிசார் நேசமணி என்பதை பிரபல படுத்தியவர்களை ஒரு வளையத்திற்கு உட்படுத்தி விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்!
ஏரி திருடன் பச்சமுத்து பாராளுமன்ற உறுப்பினர் ஆனதற்கு பிறகு அரசியலில் கவனம் செலுத்துவது போல் கொலைகளை மறைக்க நினைப்பது நன்றாக தெளிவாகிறது! மாணவர்கள் மரணத்தில் முழு விசாரணை அவசியம் தேவை
A.M.K.மணிவண்ணன்.
No comments:
Post a Comment