கடந்த 2009ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வைகோ, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சாந்தி விசாரித்தார். வழக்கில் குற்றச்சாட்டு பதிவு, 9 அரசு தரப்பு சாட்சிகளிடம் சாட்சி விசாரணை மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் கேள்விகளைக் கேட்டு பதில் பதிவு செய்யும் நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்தன. இதனையடுத்து காலை 10.30 மணியளவில் வைகோ மீதான தேச துரோக வழக்கில் தீர்ப்பளிக்கப்படது மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிட உள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை வைகோவுக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் படி அவர் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேச துரோக வழக்கில் வைகோ குற்றவாளி
இந்திய இறையாண்மை எதிராக பேசியதாக வைகோ மீது தொடரப்பட்ட வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு
தேச துரோக வழக்கில் வைகோவிற்கு ஒரு வருடம் சிறை 10000 ரூபாய் அபராதம்
இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள் - எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தபின் வைகோ பேட்டி!
ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு காரணம் என நான் பேசினேன்!
நான் பேசியதை அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் நேரில் சொன்னேன்!
நான் பேசியது தேச துரோகம் அல்ல!
நீதிபதி வழங்கிய தீர்ப்பை வாங்கி பார்த்தோம், அதில் குறைந்தபட்ச தண்டனை கேட்டதாக இருந்தது!
எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது, நான் அதிகபட்ச தண்டனை தான் கேட்டேன்!
ஆயுள் தண்டனை என்றால் கூட மகிழ்ச்சியோடு ஏற்பேன்!
விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக 19 மாதம் சிறையில் இருந்தேன்!
நான் என் கருத்தை தொடர்ந்து விதைப்பேன், தொடர்ந்து விடுதலை புலிகளை ஆதரித்து பேசுவேன் - வைகோ!
No comments:
Post a Comment