நாங்கள் முதலில் பதவியேற்றபோது, இந்தியா, 1.8 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இருந்தது. சில வருடங்களில் அதை 2.7 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றினோம். இன்னும் சில வருடங்களில் 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவோம்
சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை வெற்றிபெற முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் இந்தியாவின் சொத்துக்களை அதிகரிக்கிறது அந்த திட்டம் ஊக்குவிக்கப்படும்
அந்நிய முதலீடு அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
இந்தியா இப்போது 6வது பெரிய பொருளாதார நாடு. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இது 11ஆவது இடத்தில் இருந்தது
கடந்த 5 ஆண்டுகளில் 657 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.
அனைவருக்கும் வீடு, கழிவறையை உறுதிப்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது
எரிபொருள் மாற்றாக பேட்டரி வாகனங்கள் உற்பத்தியை அரசு ஊக்குவிக்கும்.
நீர்வழிப் போக்குவரத்து மூலம் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த திட்டம்
2018 - 30 ஆண்டுகளில் ரயில்வேயில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவை என்பதால் தனியார் பங்களிப்பு அவசியம்.
மின்கட்டண வரையறையில் மறுசீரமைப்பு தேவை
சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் ரூ.1 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டிலேயே 3 லட்சம் கோடி டாலராக வளர்ச்சி பெறும்
ஒரு நாடு ஒரு மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சம அளவில் மின்சார விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன
சாதாரண மக்களுக்காக பெரும் சீர்த்திருத்தங்களை அரசு மேற்கொண்டு உள்ளது - நிர்மலா சீதாராமன்
அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கபடும் ரயில்வே துறையில் பயணியர் சரக்குப் போக்குவரத்தில் தனியார் பங்களிப்பு ஈடுபடுத்தப்படும்.
தற்போது வீடு வாடகை சட்டங்கள் சீரமைக்கப்பட்டு மாற்றம் கொண்டு வரப்படும்.
கார்ப்பரேட் கடன் சந்தை சீரமைப்புக்கு கண்காணிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
தன்னார்வ நிறுவனங்களை செபியின் பட்டியலிட நடவடிக்கை
தன்னார்வ நிறுவனங்கள் நிதி ஆதாரங்களை திரட்டுவது வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும்.
2018 - 19ம் நிதி ஆண்டில் அந்நிய முதலீட்டு வலுவான நிலையில் உள்ளது
விமானப் போக்குவரத்து மற்றும் ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க திட்டம்
அந்நிய நாடுகளின் செயற்கைக் கோள்களை செலுத்தும் அளவிற்கு விண்வெளி ஆய்வு வளர்ச்சி
இஸ்ரோவின் வணிகரீதியான செயல்பாடுகளுக்கு புதிய அமைப்பு தொடங்கப்படும்
இலவச சமையல் எரிவாயு திட்டம் சவுயாக்யா திட்டங்கள் ஊரகப்பகுதி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 1.9 கோடி வீடுகள் வழங்கப்படும்
13000 கிராமசாலைகள் பசுமை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன.
ரூ80.250 கோடி மதிப்பீட்டில் 1.25 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் சாலைகள் மேம்படுத்தப்படும்.
கைத்தறித்துறை மூலம் 100 புதிய தொழில் மையங்கள் அமைத்து 50000 பேருக்கு வேலைவாய்ப்பு.
வேளாண் துறை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் தன்னிறைவு பெரும் பெறுவோம் என நம்பிக்கை
விவசாய ஆன்லைன் சந்தைகள் மூலம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படும்
வங்கி முறைகேடுகள் தடுப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் மறைமுக வரிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது.
மின்கட்டண முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டியது அவசியம்
சரக்குகளை நீர்வழிப் போக்குவரத்து மூலம் எடுத்துச் செல்வது ஊக்கப்படுத்தப்படும்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் முக்கியமான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது!
பாரத் மாலா திட்டம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளை இணைக்க உதவும்
300 கிலோ மீட்டருக்கு புதிய மெட்ரோ லைன் 2019-20 நிதி ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்படும்.
ரயில், பஸ் என எல்லாவற்றுக்கும் ஒரே அட்டை அறிமுகப்படுத்தப்படும்
மழைநீர் சேமிப்பு மூலம் கிடைக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை
2024-க்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வோம்
5.6 லட்சம் கிராமங்களில் திறந்தவெளி கழிப்பறை நிலையில் ஒழிக்கப்பட்டுள்ளன
நகரங்களுக்கு இடம் பெயர்வதை தவிர்க்க கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்
இந்தியாவின் 95% நகரங்களில் திறந்தவெளி கழிப்பறைகள் இல்லாதவையாக மாறியுள்ளன
ஒவ்வொரு கிராமத்திலும் இணைய வசதி கிடைப்பது உறுதி செய்யப்படும்
காந்தி இயக்கம் பற்றி அறிந்து கொள்வதற்காக தேசிய அளவில் காந்திபீடியா உருவாக்கப்பட்டு வருகிறது
இந்தியாவின் உயர் கல்வியை உலகத்திற்கு மேம்படுத்துவதற்காக புதிய கல்விக் கொள்கை
கல்வி ஆராய்ச்சிக்கான நிதி உதவிகளையும் தேசிய ஆராய்ச்சி கட்டளை ஒருங்கிணைக்கும்
கல்வியில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள புதிய அமைப்பு உருவாக்கப்படும்
தற்போது 3 இந்திய கல்வி நிறுவனங்கள் முதல் 200 இடங்களுக்கு முன்னேறியுள்ளன
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதை ஊக்குவிக்க "இந்தியாவில் பயலுங்கள்" திட்டம்
"விளையாடு இந்தியா" திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்
பிரதமர் கவுசல் விகாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி
எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்ப பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நடவடிக்கை
மரபுசார் தொழிற்பயிற்சி மற்றும் 3d, அனிமேஷன், செயற்கை நுண்ணறிவு உட்பட துறைகளிலும் பயிற்சி
நாடு முழுவதும் 4 தொழிலாளர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்
புதிய தொலைக்காட்சியும் ஸ்டார்ட் ஆப் நிர்வாணமாகவே தொடங்கப்படும்
அரசுத்துறை உட்பட அனைத்துத் துறையிலும் டிஜிட்டல் பணம் செலுத்தும் வசதிகள் உள்ள
இலவச எல்இடி பல்புகளால் ரூபாய் 18.341 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது
தேசத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை
தனியார் மற்றும் அரசு பங்களிப்பு களுடன் மகளிர் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை*
பொதுவாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது
பெண்கள் பங்களிப்பு அதிகரித்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன
பெண்கள் பங்களிப்பு மட்டுமின்றி பெண்கள் தலைமையேற்கவும் தொடங்கிவிட்டனர்
ஒவ்வொரு சுயஉதவிக் குழுவில் ஒரு பெண்களுக்கு ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும்
என்.ஆர்.ஐ-கள் இந்தியா வந்த உடனேயே ஆதார் அட்டை வழங்கப்படும் 180 நாள் காத்திருப்பு தேவையில்லை
உலகத் தரத்தில் 74 புதிய சுற்றுலா மையங்கள் ஏற்படுத்தப்படும்.
என்றார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
No comments:
Post a Comment