ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக காத்திருப்பு போராட்டம்💪-2 இடங்களில் பணிகள் வாபஸ்👏 - Agnipuratchi

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக காத்திருப்பு போராட்டம்💪-2 இடங்களில் பணிகள் வாபஸ்👏

Share This

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு 🏛தமிழகத்தில் அனுமதி கொடுக்கப்படவில்லை🚫. இதை மீறி இந்த திட்டத்தை தொடங்குவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்😳 என்று 🏛சட்டமன்றத்தில் அமைச்சர் சண்முகம் அறிவித்தார்🔈. ஆனால் 🏛திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகில் பெரியகுடி, சோழங்கநல்லூர் ஆகிய இடங்களில் அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது🙄. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக 🌊காவிரி 🌾விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கோட்டூர் 👮போலீஸ் நிலையத்தில் கடந்த 📆17ம் தேதி புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து, நேற்று காலை ஏராளமான 🌾விவசாயிகள் மன்னார்குடி 🏢ஆர்டிஓ அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை💪 தொடங்கினர். இதையடுத்து, ஆர்டிஓ 🤵புண்ணியகோட்டி தலைமையில் பேச்சுவார்த்தை🗣 நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், கோட்டூர் அருகே பெரியகுடி, சோழங்கநல்லூர் ஆகிய 2 கிராமங்களில் நடைபெற்ற பணிகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய 🤵அதிகாரிகள் அனுமதி கொடுக்கவில்லை❌ என்று கூறினர். இதனைதொடர்ந்து 2 இடங்களிலும் நடைபெற்று வந்த எண்ணெய் கிணறு அமைக்கும் பணிகளுக்கு தடைவிதிப்பதாக ஆர்டிஓ கூறினார்😯. இதையடுத்து 2 இடங்களிலும் நடைபெற்று வந்த பணிகள் நிறுத்தப்படுகிறது👏 என ஓஎன்ஜிசி அதிகாரிகள் தெரிவித்தனர்📣 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages