ЁЯПЫроХோропроо்рокேроЯு роЖроо்ройி рокேро░ுрои்родு роиிро▓ைропрод்родிро▓் ЁЯЪМ2 рокேро░ுрои்родுроХро│ிро▓் родிроЯீро░் ЁЯФеродீ ро╡ிрокрод்родு. - Agnipuratchi

ЁЯПЫроХோропроо்рокேроЯு роЖроо்ройி рокேро░ுрои்родு роиிро▓ைропрод்родிро▓் ЁЯЪМ2 рокேро░ுрои்родுроХро│ிро▓் родிроЯீро░் ЁЯФеродீ ро╡ிрокрод்родு.

Share This

🏛சென்னை கோயம்பேட்டில், மிகப்பெரிய 🚌ஆம்னி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 🚌2 ஆம்னி பஸ்களில், இன்று மாலை திடீரென 🔥தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியிலுள்ள பயணிகள் பீதியடைந்து😨 அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். 🔥தீ மளமளவென பரவி😱 3வது பஸ்சையும் நெருங்கிய நிலையில், தகவல் அறிந்து 🚒3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 💪போராடி தீ பரவாமல் பார்த்துக் கொண்டனர்😌. இருப்பினும் 🚌2 ஆம்னி பஸ்களும் முழுவதும் எரிந்துவிட்டன. இன்று சனிக்கிழமை என்பதால், வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம், கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் அதிகமாக⏫ இருந்தது. இந்த நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து அங்கு பெரும் 👥கூட்ட நெரிசலையும் ஏற்படுத்தியுள்ளது😯. இந்த நிலையில், 🔥தீவிபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை😳. இந்த 🔥தீ விபத்தில், 👥பயணிகள் யாருக்கும் தீக்காயம் உள்ளிட்ட எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. தீ🔥 பிற பகுதிகளுக்கும் பரவாமல் 🚒தீயணைப்பு வீரர்கள் ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை👍 எடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages