இனி முன்பதிவில்லாத 🚆ரயில் பெட்டிகளிலும் சீட் கிடைப்பது உறுதி👍-🚆ரயில்வே துறை. - Agnipuratchi

இனி முன்பதிவில்லாத 🚆ரயில் பெட்டிகளிலும் சீட் கிடைப்பது உறுதி👍-🚆ரயில்வே துறை.

Share This

நீண்ட தூரம் செல்லும் 🚆ரயில்களில் பொதுவாக 3 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ஏழை, எளிய 👥மக்களின் வசதிக்கேற்ப பொதுப்பெட்டிகளில் 💸பயணக்கட்டணம் இருப்பதால், எப்போதும் கூட்டம்⏫ நிறைந்தே காணப்படும்👀. இதில் சீட் பிடிக்க பெரும் தள்ளுமுள்ளே ஏற்படும்😳. பொதுப்பெட்டியிலும் கூட்டம் நிரம்பினால், வாசலில் அமர்ந்தும், ரயிலின் கூரை மீது ஏறியும் ஆபத்தான😨 பயணம் செய்பவர்களும் உண்டு. இதனை முடிவுக்கு கொண்டுவர 🚆ரயில்வே நிர்வாகம் புதிய முறையை கையாண்டுள்ளது. பொதுப்பெட்டியில் பயணம் செய்ய வருபவர்களின் கைரேகையை பெற்று பயோமெட்ரிக் கருவி மூலம் ஒரு டோக்கன் வழங்கப்படும்😯. அதன் அடிப்படையில், பெட்டியின் கதவு திறந்த உடன், பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்👍. பயணிகள் சீக்கிரம் புறப்பட்டு கைரேகையை பதிவு செய்துகொண்டால் சீட் உறுதி👍 என்ற நிலை இருக்கிறது. மேலும், பொதுப்பெட்டியில் எத்தனை 👥பயணிகள், பயணிக்க முடியுமோ அத்தனை பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும்🙂. இதன் மூலம், ஆபத்தான பயணங்கள் குறைக்கப்படும்👏. தற்போது சோதனை முயற்சியாக 🚆மும்பை-லக்னோ இடையே பயணிக்கும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்திட்டம் விரைவில் நீண்ட தூரம்🛤 செல்லும் 🚆ரயில்களில் அறிமுகமாகவுள்ளது🎉 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages