🏛தமிழகத்தில் புதிதாக 🏢3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும்👍 என்று பேரவையில் 110 விதியின்கீழ் 💺முதல்வர் பழனிசாமி அறிவிப்பு📣 வெளியிட்டுள்ளார். அதன் விவரங்கள் இதோ👇
🔰தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் ரூ. 9.58 கோடி செலவில் அமைக்கப்படும். 2019-2020ம் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். உடனடியாக ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு தனி அலுவலர் நியமிக்கப்படுவார்.
🔰திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரியில் ரூ.7.70 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.
🔰மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 24 சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.24 கோடியில் சொந்த கட்டிடம் கட்டப்படும்.
🔰சேலத்தில் ரூ.1 கோடியில் துணை பதிவுத்துறை அலுவலகம் கட்டித் தரப்படும்.
🔰5 ஆயிரம் கி.மீ ஊரக சாலைகள் ரூ.1200 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
🔰கஜா புயலால் சேதமடைந்த சாலைகள், பாலங்கள் ரூ.200 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
🔰மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.11, 441 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.12,500 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்.
🔰தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ.318 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும். தண்ணீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்துவதற்காக தடுப்பணைகள் கட்டப்படும்.
🔰சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தற்போது இயங்கி வரும் பல்வேறு சார் நீதிமன்றங்களுக்கு கூடுதல் இடம் அளிப்பதற்காக ரூ.202.40 கோடி மதிப்பீட்டில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படும்.
🔰நடப்பாண்டில் ரூ. 125 கோடி செலவில் 25,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கூடிய பயிற்சிகள் வழங்கப்படும்.
No comments:
Post a Comment