பல்வேறு 💪போராட்டங்களில் 🇮🇳இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும், ஒரு சமூகத்தினருக்கு எதிராக தேவையற்ற கருத்துகளை 👥மக்களிடம் திணித்ததாகவும்😱 திருமுருகன் காந்தி மீது திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட 👮காவல் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 🏛உயர்நீதிமன்றம் மற்றும் 🏛உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேசியதாகவும்😳 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை ரத்து செய்யுமாறு திருமுருகன் காந்தி சார்பில், தனித்தனியே உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம்📄 இருப்பதால் வழக்குகளை ரத்து செய்யக் கூடாது❌ என 🏛அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கில் தீர்ப்பளித்த⚖ நீதிபதி, வழக்குகளை ரத்து🚫 செய்யக் 🙏கோரிய திருமுருகன் காந்தியின், 📜8 மனுக்களையும் தள்ளுபடி செய்தார். மேலும் மனுதராரின் பேச்சு🗣 மற்றும் நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது அவர் மீது 👮காவல்துறை வழக்கு தொடர அனைத்து முகாந்திரமும் இருப்பதாகத் தெரிவித்த🗣 நீதிபதி, மனுதாரர் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்👍 என கூறினார். மனுதாரர் விசாரணை நீதிமன்றத்தை அணுகி வழக்கை எதிர் கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்⚖.
திருமுருகன் காந்தியின் 📜8 மனுக்களையும் தள்ளுபடி செய்தது 🏛உயர்நீதிமன்றம்⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment