ஒகேனக்கலுக்கு 🌊காவிரி நீர்வரத்து💦 மேலும் அதிகரிப்பு. - Agnipuratchi

ஒகேனக்கலுக்கு 🌊காவிரி நீர்வரத்து💦 மேலும் அதிகரிப்பு.

Share This

🏛கர்நாடக மாநிலத்தில் உள்ள 🌊காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ☔கனமழை பெய்ததால் 🏛கர்நாடக அணைகளுக்கு அதிக அளவு தண்ணீர் வந்த நிலையில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையில் இருந்து 🌊காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது👍. இந்நிலையில் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு👀 மேற்கொண்டுள்ளனர். ஒகேனக்கல்லில் நேற்று மாலை நிலவரப்படி நீர்வரத்து ⌚வினாடிக்கு 💦9 ஆயிரத்து 500 கன அடியாக இருந்தது😯. மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் 🌊தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா 👥பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது. 💪பாதுகாப்பு கருதி 📆9வது நாளாக இன்றும் ⛵பரிசல் இயக்க தடை🚫 விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 💦8 ஆயிரத்து 900 கன அடியாக இருந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து⏫ இன்று ⌚வினாடிக்கு 💦9 ஆயிரத்து 200 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது😳. அணையில் இருந்து வினாடிக்கு 💦1000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நீர் வரத்தை விட நீர் திறப்பு குறைவாக உள்ளதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது😐. நீர்மட்டம் கடந்த 📆9 நாட்களில் 8 புள்ளி 54 அடி உயர்ந்து 47.67 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages