முத்துவிழாவில் வாழ்த்திய தலைவர்கள், நல் உள்ளங்களுக்கு என் நன்றிகள்! -பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் - Agnipuratchi

முத்துவிழாவில் வாழ்த்திய தலைவர்கள், நல் உள்ளங்களுக்கு என் நன்றிகள்! -பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்

Share This

பாட்டாளி சொந்தங்களின் விருப்பப்படி எனது 80&ஆவது பிறந்தநாள் விழா முத்து விழாவாக சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. எனது பிறந்தநாளையொட்டி வாழ்த்துச் செய்தி மற்றும் மலர்க்கொத்து அனுப்பியதுடன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வாழ்த்துச் செய்தி மற்றும் மலர்க்கொத்து அனுப்பிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டுவிட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஆகியோருக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முத்துவிழா அரங்குக்கு நேரில் வந்து வாழ்த்திய பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன்,   இல்லத்திற்கு வந்து வாழ்த்திய சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோருக்கும்  எனது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.- முத்து விழா மலருக்கு வாழ்த்துச் செய்திகளும், கட்டுரைகளும் அனுப்பிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவேற்காட்டில் நடைபெற்ற முத்துவிழாவுக்காக தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும்  வந்த பாட்டாளி சொந்தங்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages