🇮🇳நாடு முழுவதும் 📚எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு ✍நீட் தேர்வை கட்டாயமாக்கி 📆2016ம் ஆண்டு 🏛உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது⚖. தமிழக நீட் தேர்வை உடனடியாக அமல்படுத்த முடியாத சூழல் உள்ளதாக தெரிவித்ததால்😳 ஓராண்டுக்கு மட்டும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு🚫 வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக நீட் மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது😯. இந்த ஆண்டு நாடு முழுவதும் நீட் தேர்வு 📆மே 5ம் தேதி நடந்தது. 14,10,755 பேர் நீட் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 1,23,078 பேர் தேர்வு எழுதினர். அதில் 👥59,785 பேர் தேர்ச்சி👏 பெற்றிருந்தனர். 🏛தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு 💻இணையதளத்தில் விண்ணப்பித்தல் 📆ஜூன் 7ம் தேதி தொடங்கி 20ம் தேதி முடிந்தது. இதில் விண்ணப்பித்த 👥68,020 மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியலை📜 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 👍வெளியிட்டார். 📆ஜூலை 8ம் தேதி சிறப்புப்பிரிவு இடங்களுக்கும், ஜூலை 9ம் தேதி முதல் பொதுப்பிரிவு இடங்களுக்கும் கலந்தாய்வு தொடங்க உள்ளது. எம்.பி.பி.எஸ். தரவரிசை பட்டியலில்📜 திருவள்ளூரை சேர்ந்த 👩ஸ்ருதி முதலிடம் பிடித்துள்ளார்🎉. அந்தியூரை சேர்ந்த 👨அஸ்வின் ரான் 2ம் இடமும், கோவையை சேர்ந்த 👩இளமதி 3ம் இடத்தை பிடித்துள்ளனர்🙂 என்பது குறிப்பிடத்தக்கது.
💉மருத்துவ 📚படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்📜 வெளியீடு🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment