இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் 🏛தமிழக முதல்வர் புதிய அறிவிப்புகளை🔈 வெளியிட்டார்👍 - Agnipuratchi

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் 🏛தமிழக முதல்வர் புதிய அறிவிப்புகளை🔈 வெளியிட்டார்👍

Share This

🏛தமிழக சட்டமன்றக் 👥கூட்டத் தொடரில் தினமும் பல்வேறு துறை சார்ந்த 💸மானியக் 🙏கோரிக்கை விவாதம்🗣 நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 💺முதல்வர் பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் புதிய அறிவிப்புகளை📣 இன்று வெளியிட்டார். இதோ அதன் விவரங்கள்👇

🔰சேலம் சுகாதார மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படுகிறது. ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய சுகாதார மாவட்டம் ஏற்படுத்தப்படும். 
🔰ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். 
🔰ரூ.67.76 கோடி மதிப்பில் ஈரோடு அரசு மருத்துவமனை, உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். 
🔰296 துணை சுகாதார நிலையங்களில் ரூ.79 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்படும். 
🔰அனைத்து மாவட்டங்களிலும் பல்வகை காயங்களுக்கு சிகிச்சை அளிக்க உலகத் தரம் வாய்ந்த தீவிர சிகிச்சை மையம் அமைக்கப்படும். 
🔰காஞ்சிபுரத்தில் அண்ணா மருத்துவமனையில் ரூ.120 கோடியில் புற்றுநோய் மேன்மை மையம் அமைக்கப்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages