பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள். பெண்களிடம் அன்பு, பாசம், ஈரம் ஆகியவை இருப்பதைப் போலவே வீரமும் உள்ளது. ஆனால், தமிழ்நாடு உட்பட இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மகளிருக்கு உரிய அங்கீகாரத்தை போராளி அமைப்புகள் வழங்கியதில்லை.
மாறாக, போராளிகள் தங்களுக்கு கிடைக்கும் கதாநாயக அந்தஸ்தை பயன்படுத்தி மகளிரை வீழ்த்துவதைத் தான் வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு இரு காரணங்கள் உண்டு.
முதலாவது பெரும்பாலான போராளிக் குழுக்களின் உண்மையான நோக்கம் அறிவிக்கப்பட்ட இலக்கை விட வேறாக இருக்கும். இரண்டாவது, இன்றைய சூழலில் நமது நாட்டில் போராளிகள் பணி தான் நல்ல வருவாய் ஈட்டித் தரும் பணியாக திகழ்கிறது.
ஆனால், இந்த இலக்கணங்களை எல்லாம் உடைத்தெறிந்த போராளி இயக்கம் ஒன்று உண்டு. அதன் தலைவர் பெண்களை மதித்தவர். பெண்களின் அனைத்து குணங்களையும் மதித்ததைப் போலவே அவர்களின் வீரத்தையும் மதித்து துப்பாக்கி ஏந்த கற்றுக் கொடுத்தவர். தரைப்படை மட்டுமின்றி, கடற்படை, விமானப்படை ஆகியவற்றிலும் பெண் போராளிகளுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்தார்.
பெரிய அளவில் வசதிகள் இல்லாத முகாம்களில் பெண் போராளிகள் ஒன்றாக இருந்தாலும் கூட ஆண் போராளிகளிடம் அத்துமீறியது கிடையாது. விதிவிலக்காக எவரேனும் தவறாக நடந்து கொண்டால் அத்தகைய மிருகங்களுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கியது தான் அந்த இயக்கம்.
அந்த இயக்கத்தில் பணியாற்றிய தளபதிகள் சிலர் பெண் போராளிகளை திருமணம் செய்து கொண்டதுண்டு. அவ்வாறு மணம் முடிக்க பல நிபந்தனைகள் உண்டு. அந்த உறவு புனிதமானதாகும்.
உலகின் பல நாட்டு ராணுவங்களில் ஆண் வீரர்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே பெண் படைகள் உண்டு. ஆனால், பெண் போராளிகளை சகோதரிகளாக நினைத்து மதித்த ஒரே இயக்கம் அந்த இயக்கம் தான்.
அந்த இயக்கத்தின் பெயர் என்ன?
No comments:
Post a Comment