☔மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு 💦நீர்வரத்து உயர்வு⏫ - Agnipuratchi

☔மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு 💦நீர்வரத்து உயர்வு⏫

Share This

🌊பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான 🏛நீலகிரி ⛰மலைப்பகுதி மற்றும் 🏛வடகேரளாவின் ஒருசில பகுதிகளில் பரவலாக ☔மழை பெய்து வருகின்றது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது⏫. இதை தொடர்ந்து நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 530 கனஅடியாக இருந்த நிலையில்😐, இன்று காலை நீர்வரத்து 💦2 ஆயிரத்து 301 கனஅடியாக அதிகரித்துள்ளது👍. இதையடுத்து இன்று காலை ⌚8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டமானது 58.99 அடியாகவும் மற்றும் 💦நீர் இருப்பு 6.9 டிஎம்சியாகவும் உள்ளது😳. மேலும் பவானிசாகர் அணையில் இருந்து 🌊பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி நீரும் கீழ்பவானி வாய்க்காலில் 🚰குடிநீர் தேவைக்காக 💦5 கனஅடி நீரும் என மொத்தம் 💦1005 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது😯 என்பது குறிப்பிடத்தக்கதாகும். 🏛ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் மற்றும் குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரம், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். மேலும் இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் 🏛மாவட்டங்களில் உள்ள 🌾2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன🎉.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages