மின்சார வாகங்கள் போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு அல்ல. ஆனால், காற்று மாசுபாட்டை அவை குறைக்கும். மேலும், கரியமிலவாயு மற்றும் குறைந்த காலமே நீடிக்கும் காலநிலை மாசுக்காற்று (SLCPs -Short-Lived Climate Pollutants) வகைகளை மின்சார வாகனங்கள் குறைக்கும். எனவே, நகர்ப்புற போக்குவரத்து மின்சாரத்துக்கு மாற வேண்டும்.
குறிப்பாக பொதுப்போக்குவரத்து வசதிகளை மின்மயமாக்கும் தேவை உள்ளது. இதற்கான கட்டமைப்புகள் (பெட்ரோல் நிலையம் போன்ற மின்னேற்றம் அளிக்கும் மையங்கள் உள்ளிட்டவை) உருவாக்கப்பட அரசு முன்வர வேண்டும். இதற்காக தமிழ்நாடு மின்சார வாகன கொள்கையை வெளியிட்டு செயல்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment