⛰நீலகிரி மாவட்டம்-📆ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் 🚰குடிநீர் பாட்டில்களுக்கு தடை🚫 - Agnipuratchi

⛰நீலகிரி மாவட்டம்-📆ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் 🚰குடிநீர் பாட்டில்களுக்கு தடை🚫

Share This

🏛தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை🚫 விதிக்கப்பட்டிருந்தாலும், மாநிலத்தின் பிற பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள தடையைக் காட்டிலும் ⛰நீலகிரி மாவட்டத்தில் மட்டும் கூடுதலாக சில வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை🚫 விதிக்கப்பட்டுள்ளது😳. இந்நிலையில், 🏛நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் முயற்சியாக 🏛சென்னை உயர்நீதிமன்றம் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட 1 லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றுக்கும் தடை🚫 விதித்து உத்தரவிட்டுள்ளது⚖. இந்த உத்தரவை⚖ ஏற்று, 🏛நீலகிரி மாவட்டத்தில் 📆ஆகஸ்டு 15ந் தேதி முதல் 1 லிட்டர் அளவிலான பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றின் பயன்பாடு, விற்பனைக்கு நீலகிரி மாவட்ட 💺கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்⚖. முதல் கட்டமாக, இந்த தடை தேசிய மற்றும் மாநில 🛣நெடுஞ்சாலைப் பகுதிகளில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சுற்றுலாப் 👥பயணிகளின் வசதிக்காக 🏛நீலகிரி மாவட்டத்தில் தற்போது 70 இடங்களில் 🚰குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது😯. இந்த குடிநீர் ஏடிஎம் எந்திரங்களில் லிட்டருக்கு 💸ரூ.5 என்ற கட்டணத்தின் அடிப்படையில் நாணயத்தை செலுத்தி சுத்திகரிக்கப்பட்ட 🚰குடிநீரைப் பெற முடியும்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages