2018-19ம் நிதியாண்டில் 🏦வங்கி மோசடிகள் அதிகரிப்பு⏫-🏦ரிசர்வ் வங்கி - Agnipuratchi

2018-19ம் நிதியாண்டில் 🏦வங்கி மோசடிகள் அதிகரிப்பு⏫-🏦ரிசர்வ் வங்கி

Share This

🏦ரிசர்வ் வங்கி 📆2018-19 நிதியாண்டிற்கான அறிக்கையை📜 வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் நிலவும் 💸பணப்புழக்கம், கள்ள நோட்டுகள், 🏦வங்கி மோசடிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது📣. அதன்படி கடந்த நிதியாண்டில் 🇮🇳நாட்டில் நடைபெற்றுள்ள வங்கி மோசடிகளின் மதிப்பு 71 ஆயிரத்து 543 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது⏫. இது கடந்த ஆண்டு நடைபெற்ற வங்கி மோசடிகளின் மதிப்பைவிட 73.8% அதிகமாகும். 😱மேலும் முந்தைய 📆நிதியாண்டை விட ⏫15% அதிகமாக 🏦வங்கி மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது😳. அத்துடன் வங்கி துறையில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான மோசடிகளை வங்கிகள் கண்டுபிடிக்க 55 மாதங்கள் எடுத்துள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது😯. மோசடிகளை தவிர்க்க🚫 தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு👍 வருவதாகவும் 🏦ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது🔈. மேலும், இந்த 📆நிதியாண்டில் 💸500 ரூபாய் கள்ள நோட்டுகள் கடந்த நிதியாண்டில் இருந்ததை விட 121 சதவிகிதம் இப்போது அதிகரித்துள்ளதாக😳 ரிசர்வ் வங்கி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages