🍾எஸ்.என்.ஜே மதுபான 🏭ஆலை தொடர்புடைய 40 இடங்களில் 💸வருமான வரித்துறை சோதனை👀 - Agnipuratchi

🍾எஸ்.என்.ஜே மதுபான 🏭ஆலை தொடர்புடைய 40 இடங்களில் 💸வருமான வரித்துறை சோதனை👀

Share This

கடந்த 2009ம் ஆண்டு அனுமதி பெற்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் எஸ்.என்.ஜெ டிஸ்டில்லரீஸ். தமிழகத்தைச் சேர்ந்த 👤என் ஜெயமுருகன் என்பவருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் 🏭ஆலை 🏛காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. தமிழகத்தின் 🍾மது தேவையில் 15 சதவீதத்தை நிறைவேற்றுமளவு முக்கிய நிறுவனமாகத் திகழும் இந்த 🏢நிறுவனம் கேரளா, கோவா, மேற்கு வங்கம், ஒடிசா, பாண்டிச்சேரி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உயர் ரக 🍾மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் 💰கோடிக்கணக்கில் 💸வருமானம் ஈட்டி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் 150க்கும் மேற்பட்ட 💸வருமான வரித்துறை 🤵அதிகாரிகள் சோதனை👀 மேற்கொண்டுள்ளனர். சென்னை தியாகராயர் நகர் 🛣சி.ஐ.டி. காலனியில் உள்ள இதன் 🏢தலைமை அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட 🤵அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்😯. கடந்த 📆3 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு😳 தொடர்பான தகவலின்📲 பேரில் சோதனை நடைபெறுவதாவும், இது 📆2 நாட்கள் நீடிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்📣. அரசுக்கு 🍾மதுபானம் வினியோகிக்கும் ✍ஒப்பந்ததாரர் என்பதால் வரி ஏய்ப்பு🙄 விவகாரத்தில் அரசியல் புள்ளிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா🤔 என விசாரணை🗣 நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages