சேலம் - சென்னை 8 வழி சாலை வழக்கு செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக அன்புமணி ராமதாஸ் மற்றும் விவசாயிகள் என பலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அத்திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தது,
அதை எதிர்த்து நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணை
*நீதிபதிகள்**
அனைத்து எதிர்மனுதாரர்களும் பதில் மனு தாக்கல் செய்து விட்டனரா
*மத்திய அரசு தரப்பு*
சிலர் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை இந்த திட்டம் என்பது வளர்த்சிக்கு முக்கியமானது மேலும் நாங்கள் முற்கட்டமாக ஆய்வு மேற்கோள்ள அனுமதிக்க வேண்டும் குறிப்பாக எந்த சுற்றுசூழல் அனுமதி இல்லாமல் நாங்கள் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் சுற்றுசூழல் அனுமதி என்பது ஒரு நடைமுறையே தவிர, அது இந்த விவகாரத்தில் ஒரு பிரச்சனையே இல்லை முதலில் எங்களை நிலம் கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும், ஏனெனில் நிலம் கையகப்படுத்துதல் முதற்கட்டமே மேலும் கட்டுமானம் என்பது மேற்கொள்ள செற்றுசூழல் அனுமதி வேண்டும், எனவே கட்டுமானம் என்பதை சுற்றுசூழல் அனுமதி பெற்ற பின்னரே மேற்கொள்ளுவோம்
**மத்திய அரசு**
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு.
குறிப்பாக தேவைப்படும் நிலம் தொடர்பாக முறையாக விளம்பரம் செய்து, அது தொடர்பான கருத்துக்கள், ஆட்சேபனைகளை பெற்று அதன் பின்னர் உரிய இழப்பீடு கொடுத்து நிலத்தை கையகப்படுத்தலாம்
அதேபோல நிலம் தொடர்பாக சம்மந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் பிறப்பித்து அதன் பின்னர் குறிப்பிடரட கால அளவில் இழப்பீடு கொடுத்து நிலத்தை சரண்டர் செய்ய உத்தரவிடலாம், அல்லது பெற்றுக்கொள்ள சட்டத்தில் இடமுள்ளது
*நீதிபதிகள்*
இந்த திட்டத்துக்கு சுற்று சூழல் அனுமதி யார் கொடுக்க வேண்டும்?
மத்திய அரசா ? மாநில அரசா?
**மத்திய அரசு தரப்பு*
மத்திய அரசின் சுற்றுசூழல் அமைச்சகம் தான் அனுமதி கொடுக்க வேண்டும்
**நீதிபதிகள்**
எதற்காக , எந்த அடிப்படையில் உயர்நீதிமன்றம் இந்த நிலம் கையகப்படுத்தும் ஆணை ரத்து செய்யப்பட்டது?
**மனுதாரர்கள் தரப்பு**
இந்த பாரத் மால சாலை திட்டமானது முதலில்,
சென்னை - மதுரை சாலைக்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது
அதற்கு சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை, ஏனெனில் அது சாலை விரிவாக்கம் பணியாகும்
ஆனால் பின்னர் சேலம் - சென்னை திட்டமானது முறலறிலும் புதிதானது, அதற்காக நிலம் கையகப்படுத்த வேண்டும், காடுகள் அழுக்கப்படும், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கபரபடும், விவசாய நிலம் கையகப்படுத்தப்படும், நதிகள் மேலாக செல்லும் எனவே உது முறலறிலும் புதியது இதறலகு சுற்றுசூழல் அனுமதி மிக முக்கியம், அதேபோல கருத்து கேட்பு நடத்தப்பட வேண்டும், ஆனால் அது கைடைபிடிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஆணை ரத்து செய்யப்பட்டது
*நீதிபதிகள்**
நிலம் கையகப்படுத்தும் எந்த அடிப்படையில். மத்திய அரசு மேற்கொண்டது ? விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டதா ? சுற்றுசூழல் அனுமதி பெறப்பட்டதா ? இது பாரத் மாலா திட்டத்தின் கீழ் உள்ள திட்டமா ? அல்லது முற்றிலும் புதிய திட்டம் ? சுற்றுசூழல் அனுமதி பெற எத்தனை காலம் பிடிக்கும் ? என்பது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்
No comments:
Post a Comment