🗿அத்திவரதர் வைக்கப்படும் 🌊அனந்தசரஸ் குளத்தின் தண்ணீர் தரம் குறித்து அறிக்கை📜 - Agnipuratchi

🗿அத்திவரதர் வைக்கப்படும் 🌊அனந்தசரஸ் குளத்தின் தண்ணீர் தரம் குறித்து அறிக்கை📜

Share This

🏛சென்னை தி.நகரை சேர்ந்த 👤அசோகன் என்பவர், 🏛உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 📜மனுவில், ‘‘🏛காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் 🏯கோயிலில் 🗿அத்திவரதர் சிலை வைக்கப்படும் 🌊அனந்தசரஸ் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்யுமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட⚖ வேண்டும்’’ என்று கூறியிருந்தார்😐. இந்த வழக்கை விசாரித்த🗣 நீதிபதி இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்⚖. இதனையடுத்து நேற்று மீண்டும் நடந்த விசாரணையில், மாசுகட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான 🤵வக்கீல், "🌊பொற்றாமரை குளத்தில் உள்ள 💦நீர் குடிக்க தகுதியானதாக ஆய்வில்👀 தெரிய வந்துள்ளது. அதனால், பொற்றாமரை குளத்தில் உள்ள தண்ணீரைக்கொண்டு குளத்தை நிரப்பலாம்👍, ஆழ்துளை கிணறு மூலமாகவும் நிரப்பலாம்😯" என்றார். இதைக்கேட்ட 🤵நீதிபதி, "🗿அத்திவரதரை குளத்தில் இறக்கி அறையில் வைத்தவுடன், அந்த அறையில் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை நிரப்பலாம்🙂" என்றார். 
இதனையடுத்து, 🏯கோயில் நிர்வாகம் தரப்பில், "சமீபத்தில் ☔பெய்த மழை காரணமாக அத்தி வரதரை வைக்கும் அறையிலேயே நீர் ஊறி வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கை விசாரித்த🗣 நீதிபதி, "விசாரணை 📆ஆகஸ்ட் 19க்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளிக்கும் அறிக்கையை📜 பொறுத்து எந்த 💦தண்ணீரைக்கொண்டு குளத்தை நிரப்பலாம் என்று உத்தரவு⚖ பிறப்பிக்கப்படும்👏" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages