🌊காவிரியில் ஓன்றரை லட்சம் 💦கன அடி நீர் திறப்பு😱 - Agnipuratchi

🌊காவிரியில் ஓன்றரை லட்சம் 💦கன அடி நீர் திறப்பு😱

Share This

🏛கர்நாடகா மாநில 🌊காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில 📆நாட்களாக பெய்து வரும் ☔மழையால் அங்குள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது⏫. குறிப்பாக கபினி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது😯. இதனால் அந்த 💦அணைகளில் இருந்து நேற்று முன்தினம் 🏛தமிழகத்திற்கு ⌚வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது😐. கடல் மட்டத்தில் இருந்து 💦2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 💦2,282 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு ⌚வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது😏. நேற்று மாலையில் நீர் வரத்து ⌚வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்தது. அந்த 💦தண்ணீர் முழுவதும் அப்படியே அணையின் 4 மதகுகள் வழியாகவும் திறந்துவிடப்பட்டு உள்ளது😨. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி, கபினி அணையில் இருந்து 1½ லட்சம் கனஅடி என 🏛தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 💦1 லட்சத்து 54 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனையடுத்து, ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது🙄. சுற்றுலா 👥பயணிகளுக்கு ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும்😳, பரிசல்⛵ இயக்கவும் தடை🚫 விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages