பக்ரித் திருநாள் ! - மருத்துவர் இராமதாசு வாழ்த்து - Agnipuratchi

பக்ரித் திருநாள் ! - மருத்துவர் இராமதாசு வாழ்த்து

Share This

ஹஜ் பெருநாள் என்றும், தியாகத் திருநாள் என்றும் போற்றப்படும்  பக்ரித்  திருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமியர்களின் ஐந்து புனிதக்கடமைகளில் ஒன்று மெக்கா நகருக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகும். இந்தக் கடமையின் ஓர் அங்கமாக ஹஜ் மாதம் 10-ஆம் நாள் சிறப்புத் தொழுகை நடத்தி, அதன் முடிவில் இறைவனுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதை இஸ்லாமிய மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கான நடைமுறைகளில் பல பாடங்கள் அடங்கியுள்ளன.

பக்ரித் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. பக்ரித் திருநாளின் போது ஆடுகளை பலியிடும் இஸ்லாமியர்கள் அதை மூன்று பிரிவுகளாக பிரித்து ஒன்றை அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களுக்கும், மற்றொன்றை ஏழைகளுக்கும் கொடுத்து மூன்றாவது பங்கை மட்டும் தாங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இது ஈகையையும், நல்லுறவையும் வலியுறுத்துகிறது என்றால், இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகள் ஊனம் அற்றவையாகவும், ஒரு வயது நிறைவடைந்ததாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்படுவது ஊனமுற்ற, குழந்தைப் பருவம் மாறாத உயிரினங்களை துன்புறுத்தக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது.

பக்ரித் திருநாள் சொல்லும் பாடங்களை அனைத்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். சகோதரத்துவம், அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை என்றும் நீடிக்க வேண்டும்; நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வேண்டும் என மீண்டும் வாழ்த்துகிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages