ஆங்கிலம் சரளமாக பேச🗣 விரைவில் மாணவர்களுக்கு 💿சி.டி.-அமைச்சர் செங்கோட்டையன்🎙 - Agnipuratchi

ஆங்கிலம் சரளமாக பேச🗣 விரைவில் மாணவர்களுக்கு 💿சி.டி.-அமைச்சர் செங்கோட்டையன்🎙

Share This

👥15 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச 💻மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது👏 என்று அமைச்சர் செங்கோட்டையன் 📰செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்🔈. தொடர்ந்து பேசிய அவர்🎙, "வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 💸ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு 👞ஷூ வழங்கப்படும். க்யூ.ஆர். கோடு மூலமாக பாடங்களை மாணவ, மாணவிகள் படிக்கும் திட்டம் 🇮🇳இந்தியாவிலேயே முதன் முதலாக துவங்கப்பட்டுள்ளது🎉. மாணவர்களுக்கு 📚பாடங்களை கற்றுத் தருவதற்காக ஆசிரியர்களுக்கு 💻மடிக்கணினி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது😯. அரசு பள்ளி 👥மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச🗣 2 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட 💿சிடி தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் வழங்கப்படும்👌" என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், "🏛100 அரசு 🏫பள்ளிக் கூடங்களில் தலா 💰ரூ.2.50 கோடி செலவில் அவுட்டோர் ஸ்டேடியம் 🏛மத்திய அரசு அனுமதியுடன் அமைக்கப்படும்" என்றும், "தற்காலிக ஆசிரியர்களை நியமனத்தில் குளறுபடி இருக்குமானால் புகார் கொடுத்தால் அதன் பேரில், நடவடிக்கை எடுக்கப்படும்👍" என்றும் தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages