ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯУЖроиро╡роо்рокро░ிро▓் ЁЯЧ│роЙро│்ро│ாроЯ்роЪிрод் родேро░்родро▓்⁉ - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯУЖроиро╡роо்рокро░ிро▓் ЁЯЧ│роЙро│்ро│ாроЯ்роЪிрод் родேро░்родро▓்⁉

Share This

🏛தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 💸நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்தார்👀. அப்போது, இந்த 📆ஆண்டின் இறுதிக்குள் 🗳உள்ளாட்சித் தேர்தலை நடத்த 🏛மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் 📆அக்டோபர் மாத இறுதியில் 🗳உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை🔈 வெளியிட மாநில தேர்தல் ஆணையம் அனுமதி 🙏கோரி இருப்பதாக தெரிகிறது. மொத்தம் 92,771 வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற உள்ள தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச் சீட்டுகளை வழங்குமாறு 🏛தமிழக தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் ஆணையத்தை 🙏கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ள தேர்தல் ஆணையம், 👥கிராம பஞ்சாயத்துகளில் வாக்குச் சீட்டு முறையிலும் பிற உள்ளாட்சிகளில் மின்னணு இயந்திரங்களை கொண்டும் வாக்குப்பதிவை நடத்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது😯. கடந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிந்து 📆2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உள்ளாட்சி வளர்ச்சி பணிகளுக்கான 💸நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது😳 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages