🏛தமிழகத்தில் திருச்சி, மதுரை, நெல்லை நகரங்களுக்கு 🚆மெட்ரோ ரயில் திட்டம்🎉 - Agnipuratchi

🏛தமிழகத்தில் திருச்சி, மதுரை, நெல்லை நகரங்களுக்கு 🚆மெட்ரோ ரயில் திட்டம்🎉

Share This

🇮🇳நாட்டின் பெருநகரங்களில் பொது போக்குவரத்து சேவையை ⏫மேம்படுத்த 🚆மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. 🏛சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் இரண்டு 🛤வழித்தடங்களில் 42 கி.மீ.யில் செயல்பாட்டில் உள்ளது🙂. இரண்டாம் கட்டமாக 🛤மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் துவங்கப் பட்டுள்ளன👏. சென்னையை தொடர்ந்து 🏛கோவையில் மெட்ரோ ரயில் சேவையை துவங்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை📜 தயாராகி வருகிறது. இந்நிலையில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களுக்கும் 🚆மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த 🏛மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறுகையில், "பெருநகரங்களில் இயக்கப்படுவதை விட நீளம் குறைந்த மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான புதிய வரைமுறைகளை 🏛மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது😯. இதில் சிறிய அளவில் 🚆மெட்ரோ ரயில் 🚉நிலையங்களுக்கான மாதிரி வடிவமைப்புகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அளித்துள்ளது👍. இதன் தொடர்ச்சியாக 🏛தமிழகத்தில் முதல்கட்டமாக திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த🎉 மத்திய அரசு பரிசீலித்து வருகிறது🙂" என்று கூறியுள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages