முல்லைப்பெரியாறு அணையில் 🌊நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது⏫ - Agnipuratchi

முல்லைப்பெரியாறு அணையில் 🌊நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது⏫

Share This

தேனி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, மாவட்டம் உட்பட 🏛ஐந்து மாவட்டங்களின் முக்கிய 💦நீர் ஆதாரமான 🌊முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் ☔மழை பெய்து வருவதால் 496 கனஅடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்துள்ளது😳. நேற்று 113 புள்ளி 4 பூஜ்ஜியம் அடியாக இருந்த 🌊பெரியாறு அணை நீர்மட்டம் இன்று காலை 114 அடியாக உயர்ந்துள்ளது⏫. அணையின் 💦இருப்புநீர் ஆயிரத்து 459 மில்லியன் கன அடியிலிருந்து ஆயிரத்து 560 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது😯. இந்நிலையில், அணையிலிருந்து 🏛தமிழகப்பகுதிக்கு ⌚வினாடிக்கு 300 கனஅடி 💦தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதற்கிடையே, 💦நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து அதிக ☔மழை பெய்தால் ஐந்து மாவட்டங்களுக்கான 🚰குடிநீர் விநியோகம் மற்றும் 🏛தேனி மாவட்டத்தில் 🌾விவசாயம் செழிப்பாக நடைபெற வாய்ப்புள்ளது👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages